- அஞ்சலி (3)
- அனுபவம் (2)
- அரசியல் (36)
- அறிவியல் (1)
- ஆரியம் (2)
- இடஒதுக்கீடு (1)
- இந்தியா (3)
- இலங்கை (12)
- ஈழம் (21)
- கவிதை (2)
- காவிரி (1)
- கைது (1)
- கொலைவெறி (3)
- சட்டம் (1)
- சமூகம் (6)
- சிதம்பரம் செருப்படி (1)
- சீமான் (2)
- செயலலிதா (2)
- தமிழக அரசு (2)
- தமிழகம் (3)
- தமிழ் (2)
- தமிழ்க் கணினி (1)
- திராவிடம் (1)
- தேர்தல் (12)
- நகைச்சுவை (1)
- நூல் வெளியீடு (1)
- பாடல் (1)
- பார்ப்பனர் (2)
- பிளாகர் (1)
- புதுச்சேரி (18)
- பொது (1)
- போராட்டம் (9)
- மதம் (3)
- மறியல் (1)
- முதுமை (1)
- முத்துகுமார் (1)
- மொழி (2)
- வகைப்படுத்தாதவை (1)
- வைகோ (8)
-
▼
2009
(24)
-
►
January
(7)
- புதுச்சேரியில் சிங்களர் நடத்தும் விடுதியில் தி.மு....
- புதுச்சேரியில் சிங்களர் நடத்திய விடுதி உடைப்பு
- தமிழக அரசு அறிவித்த 2 லட்ச ரூபாயை ஏற்கமாட்டோம் முத...
- புதுச்சேரியில் முத்துக்குமாருக்கு அஞ்சலி சுமார் 1...
- முத்துகுமரன் தற்கொலைக்கு தூண்டியதாக மத்திய அரசின் ...
- மக்களுக்கான ராணுவம்-கூலிகள், மக்களே ராணுவம்- புலிக...
- தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய எருமைத்த...
-
►
January
(7)
About Me
Blog Archive
Saturday, October 10, 2009
Wednesday, September 30, 2009
கீழே உள்ள செய்தி தினமலர் செய்தி ஏட்டில் வெளிவந்துள்ள செய்தியாகும். இத்தனை முறை தமிழர்கள் தாக்கப்பட்டும் கேட்க இயலாத, பாதுகாக்க இயலாத கையாலாத தமிழகத்தின் அருகிலுள்ள கடலோர காவல்படை இருந்து ஒரு பயனும் இல்லை. எனவே அவற்றை கலைத்துவிடலாம். மக்களின் பணமாவது மிச்சமாகும். இலங்கை கடற்படையையே தட்டிக்கேட்காத இந்திய படை சீனாவையா கேட்கப்போகிறது.
தமிழர்களை எப்படி தாக்கினாலும் கருணாநிதி கடிதம் எழுதுவார். அந்த தமிழின துரோகி ஒரு போதும் எதுவும் செய்யப்போவதில்லை.
தமிழர்களாகிய நாம் தான் ஏதேனும் செய்தால் உண்டு.
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
.......................
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
.........................
கீழ்வெண்மணியில் 47 தலித்துகளை உயிருடன் கொளுத்திய போது கவிஞர் இன்குலாப் அவர்களால் எழுதப்பட்ட பாடல் இது..........
இப்போது தமிழ் மக்களாகிய நாங்கள் இந்திய கடற்படையை நோக்கி கேட்கிறோம்.
இலங்கைகாரன் தமிழர்களை அடிச்சி கொல்லுறான்!
தமிழ் நாட்டுக்காரன் தினம்தினமும் செத்து மடியிறான்!!
அவன் அடிக்கும் போது! எவன் மசுர புடுங்க போரீங்க!!
என்று தான் எழுத தோன்றுகிறது.
Saturday, May 16, 2009
பாராளுமன்றத் தேர்தலில் பொதுவாக வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது வழக்கம் இல்லை, ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில் "கோடிகள் விளையாடியுள்ளது" . இலங்கை பிரச்சனையில் பா.ம.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்களை செய்துவந்துள்ளது. இக்கட்சிகள் வெற்றி பெற்றால் மிகப் பெரிய பிரச்சனை எழும் என நினைத்த வெளிநாட்டு சக்கதிகள் தி.மு.க விற்கு பெருமளவில் பணத்தை கொடுத்து அதன் வெற்றிக்கு அடிகோலியுள்ளன. சீனாவின் முன்னேற்பாட்டில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் பரவலாக அனுப்பி வைக்கப்பட்ட பலர் இந்திய தேர்தலில் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் தி.மு.க அன்னிய சக்திகளின் ஊடுறுவலுக்கு துணைபோயுள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
அதே நேரத்தில் அ.தி.மு.க இருந்த தொகுதியில் அந்த அளவுக்கு பணம் செலவு செய்யவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. இக்கட்சியை பா.ம.க, ம.தி.மு.க கட்சிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியாகவும் அந்த கட்சிக்கு எதிராக அதிக நிதி அளிக்கப் படவில்லையாம். இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி அடைந்துள்ளதால் இரு கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஈழப்பிரச்சனை பேசுவதால் பலன் இல்லை என்று சொல்லி செயலலிதாவையும் பின்னர் திசை திருப்பிவிடலாம் எனவும் இவ்வாறு முடிவெடுத்து செயல் பட்டார்கள் எனவும் தெரிகிறது.
திருமாவளவனும் ஈழப்பிரச்சனையில் ஆபத்தானவராக கருதப்படுவதால் அவர் ஒரு தொகுதியில் தப்பித்தார்.
இந்த தேர்தல் முடிவு " தி.மு.க" கார்பரேட் கம்பெனிக்கு பெரிய வெற்றியாகவும் தமிழினத்திற்கு பெரும் தோல்வியாகவும் அமைந்துள்ளது.
Tuesday, May 05, 2009
காங்கிரசு மத்திய அமைச்சர் சட்டை கிழிப்பு, மாநில அமைச்சர் ஒரு கி.மீ துரத்தி அடிப்பு.........
Posted by இரா.சுகுமாரன்புதுச்சேரியை சேர்ந்த நாராயணசாமி மத்திய அமைச்சராக இருக்கிறார், இவர் புதுவையில் 18 ஆண்டுகாலம் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். நீண்ட காலமாக இவர் இப்பொறுப்பில் இருந்தாலும் இவர் மீது மக்கள் மிகவும் அதிருப்தியுடன் உள்ளனர்.
எனினும், 18 ஆண்டுகளாக தேர்தலில் நிற்காத இவரை தேர்தலில் நிற்க காங்கிரசு உத்தரவிட்டது. இதுவரை தேர்தலை சந்திக்காத இவர் இப்போது தனது எதிரிகளை எல்லாம் விலைக்கொடுத்து வாங்கினார்.
புதுச்சேரி மக்கள் காங்கிரசு கண்ணனுக்கு 10 கோடி, இதில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ மூவருக்கு தலா 1.25 கோடி என 3.75 கோடி. மீதியை கண்ணன் கைவசம் என புதுவையில் மக்கள் மத்தியில் பேச்சு உள்ளது. மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சிக்கு 25 லட்சம் (முன்பணம்: 10 லட்சமாம்), மீனவ இனத்தை சேர்ந்த பா.ம.க வேட்பாளரை எதிர்த்து அச்சாதியை சேர்ந்த கட்சி விலை போனதை அடுத்து அந்த கட்சி மீது அந்த சாதிக்காரர்கள் மிக அதிருப்தியில் உள்ளனர். விடுதலை சிறுத்தைகளுக்கு 25 லட்சம் (முன்பணம்: 10 லட்சமாம்) மற்றும் தேனி செயக்குமார் உள்ளிட்ட பலருக்கு கோடிகோடியாக பணம் கை மாறியுள்ள நிலையில் முன்னால் முதல்வர் ரெங்கசாமியை இவரால் ஒன்று செய்ய முடியவில்லை.
நேற்று மத்திய அமைச்சர் தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது முன்னால் முதல்வர் ரெங்கசாமியை சிலர் விமர்சித்ததாக தெரிகிறது அதன் அடிப்படையில் நேற்று ஏற்பட்ட பிரச்சனையில் மத்திய அமைச்சரின் சட்டையை பிடித்து கிழ்த்துவிட்டனர். அதே நேரத்தில் மற்றொரு மாநில அமைச்சரான நமச்சிவாயத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிவந்துள்ளனர். இதனால் வழியில் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி அமைச்சர் தப்பியோடியுள்ளார்.
இதை புதுவை பத்திரிக்கையாளர்கள் விலை போனதை ஒட்டி இந்த செய்தி பத்திரிக்கைகளின் வெளிவராது என எதிர்பார்க்கபடுகிறது. எதிர்கட்சி என்பதால் தமிழோசை மட்டும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நன்றி: தமிழோசை
Monday, April 27, 2009
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்துள்ளதாக வரும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டவை, உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை ராணுவம் இன்று மாலை பல்டி அடித்துள்ளது.
இதனால் இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அவர் கூறியதைக் கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி கூறியதும் கேள்விக்குறியதாகியுள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் பிடியில் சிக்கியுள்ள 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்களையும் மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபடும்.
இவர்களை மீட்கும் முயற்சியில் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். அப்பாவிகள் தரப்பில் உயிரிழப்பு இருக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில மீடியாக்களில் இலங்கை அரசும், ராணுவமும் போர் நிறுத்தம் செய்வதாக தவறான, அவதூறான, விஷமனத்தனமான செய்தி வெளியாகியுள்ளது.
இது முறையல்ல. இந்த செய்தி குப்பையில் போட தகுதியானதாகும். தீவிரவாத ஆதரவாளர்களுக்கு வளைந்து கொடுக்க விரும்புபவர்கள் பரப்பியுள்ள பொய்ச் செய்தியாகும் இது.
அரசு அறிவித்துள்ள முடிவின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், மீதமுள்ள 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் ராணுவம் செல்லும்போது அங்கு அப்பாவி மக்கள் யாரும் பலியாகி விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
முல்லைத் தீவு வீழ்ந்தது முதலே பாதுகாப்புப் படைகள் மிகுந்த கவனத்துடன்தான் முன்னேறி வருகின்றன.
ஆயிரக்கணக்கான அப்பாவிகளை விடுதலைப் புலிகள் பிணையாளிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
தற்போது பாதுகாப்புப் படைகள் வெற்றியை அடைந்து வருகின்றன. தாக்குதல் லட்சியம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இனி எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் நிம்மதியாக சுவாசிக்க முடியாத அளவுக்கு நிலைமையை ஏற்படுத்தி விட்டோம்.
எனவே கன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதுதான் அரசு அறிவிப்பின் உண்மையான அர்த்தம்.
எந்தவித வெளிநாட்டு நிர்ப்பந்தம் காரணமாகவும் இப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. உலகின் மிகப் பெரிய பிணையாளிகள் மீட்பு நடவடிக்கை வெற்றியை நெருங்கியதைத் தொடர்ந்தே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறினார்.
நன்றி: தட்ஸ்தமிழ் http://thatstamil.oneindia.in/news/2009/04/27/lanka-sl-army-says-no-ceasefire-offered.html
Thursday, April 23, 2009
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தடா சட்டத்தில் கர்நாடகா போலீசால் கைது உண்மை அறியும் குழு அறிக்கை
Posted by இரா.சுகுமாரன்
Wednesday, April 08, 2009
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள அந்த நிகழ்வின் வீடியோ காட்சி:
டெல்லி: எதிர்ப்பைக் காட்ட தலைவர்கள் முகத்தை நோக்கி செருப்பை வீசுவது இப்போது வழக்கமாக விட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது தைனிக் ஜாக்ரன் பத்திரிகையின் மூத்த சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் இன்று ஷூ வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற பிரபல இந்தி நாளிதழ் தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.
அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.
ஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, ‘போதும்…போதும் நிறுத்துங்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்’ என்றார் சிதம்பரம்.
ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை.
இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், ‘யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம்’ என்றார் வழக்கமான தனது புன்னகையுடன்.
மேலும் ‘ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர்தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். அதை இத்தோடு விடலாம்’ என்றார்.
ஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம், ‘ஜர்னைல் சிங்கை ‘ஜென்டிலாக’ நடத்துங்கள்… இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த பிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம்’ என்றார்.
ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.
ஜர்னைல் சிங் பல காலமாக டெல்லி காங்கிரஸ் அலுவலக செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் ஆவார்.
வெளியே இழுத்துச் செல்லப்பட்ட ஜர்னைல் சிங் கூறுகையில், ‘நான் செய்தது தவறில்லை. எனது செயலுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது அனுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். ஆனால் நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்’ என்றார்.
ஜர்னைல் சிங் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை எழுதும் நிருபராகவும் பணியாற்றியவர்.
நன்றி : என்வழி தளம் http://www.envazhi.com/?p=6179தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்ததும் அதனை தொடர்ந்து பலர் தீக்குளித்துள்ளார்கள்,
அதே போல அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. பின்னர் இப்போது சிதம்பரத்துக்கு செருப்பு வீச்சு நடந்துள்ளது.
தமிழின விரோதிகளுக்கெல்லாம் இந்த செருப்படி விரைவில் விழும் என்று எதிர்பார்க்கலாம்.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள அந்த நிகழ்வின் பார்க்க காட்சிப்பட இணைப்பு:
செருப்படி வாங்கிய ஜார்ஜ் புஷ்!
சீனப்பிரதமர் மீது செருப்பு வீச்சு
நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?
Monday, April 06, 2009
ஈழவிடுதலைப்போரில் தமிழகம் உள்ளிட்ட பகுதியுடன் மொத்தமாக இதுவரை 16 பேர் தீக்குளித்து உயிர் துறந்து இருக்கிறார்கள். உலகநாடுகள் ஈழப்போரின் படுகொலையை கண்டுகொள்ளாமல் இருந்தபோது புலம் பெயர்ந்த தமிழர்கள் தனது ஓயாத போராட்டத்தின் விளைவாக ஈழப்படுகொலையை உலகின் பாரவைக்கு அல்லது உலகம் இந்த படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள்.
அவர்களின் அயராத உழைப்பின் பின் தான் உலக நாடுகள் கொஞ்சம் திருப்பி பார்த்தது.
ஆனால் கருணாநிதியை பாருங்கள்
Wednesday, March 25, 2009
வீசும் காற்றே தூது செல்லு.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு.........................!!
வீசும் காற்றே தூது செல்லு.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு.........................!!!!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்..............................!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்.................................!!
இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு.............................!!!
வீசும் காற்றே தூது செல்லு..........................................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு........................!!
எங்கு முகிலினம் பாட மறந்தது...........................!
எங்கள் புல்வெளி் ஆடை இழந்தது..........................!!
எங்கு முகிலினம் பாட மறந்தது...........................!
எங்கள் புல்வெளி் ஆடை இழந்தது..........................!!
தங்கைகளின் பெரும் மங்களம் போனது!..........................!
சாவு எமக்கொரு வாழ்வென ஆனது..............!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!
உங்கள் கொடிமலர் இங்கு மடியுது .................!
ஊர்மனையாவிலும் சாகுரல் கேட்குது......................!!
உங்கள் கொடிமலர் இங்கு மடியுது .................!
ஊர்மனையாவிலும் சாகுரல் கேட்குது......................!!
இங்குள பேய்களும் செய்ய மறந்ததை......................!!!
இங்குள பேய்களும் செய்ய மறந்ததை......................!!!
உங்களின் இராணுவம் செய்து முடிக்குது...............!!!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!
கத்திட கேட்டிடும் தூரமல்லோ.....................!
கடல் கைவந்து தாங்கிடும் நீளமல்லோ...........!!
கத்திட கேட்டிடும் தூரமல்லோ.....................!
கடல் கைவந்து தாங்கிடும் நீளமல்லோ...........!!
எத்தனை எத்தனை இங்கு நடந்திட.................!!!
எத்தனை எத்தனை இங்கு நடந்திட.................!!!
எங்களின் சோதரர் தூக்கல்லோ?..........................!!!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!
வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார்.................!
புலி வீரரை காட்டினில் தேடுகிறார்.........................
வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார்.................
புலி வீரரை காட்டினில் தேடுகிறார்.........................
தாங்க முடியலை வேதனைகள் .......ள்ள்ள்........................!
தாங்க முடியலை வேதனைகள் ..........................................!
இதை தாயக பூமியில் காதில் சொல்லு...................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!!!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!!!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்!
ஈழத்தில் நாம்படும் வேதனைகள்!!
இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு!!
வீசும் காற்றே தூது செல்லு!,.......................!
தமிழ் நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு!!.........................!!
..........................
இந்த பாடல் வெளிவந்து பல ஆண்டுகள் ஆனது.
இருப்பினும் இன்னும் புதிதாக சூழல் மாறாமல் இன்றைக்கும் பொருத்தமான பாடல் இந்திய படை அப்போது தமீழீழம் சென்ற போது ஒலித்த பாடல் இப்போதும் அதே நிலை அதே குரல்
ஒரு வேதனையான புகழ் பெற்ற பாடல் இது.
















